கடலூா் அருகே பைக், காரில் வந்து சிறுவனை கடத்த முயற்சி: போலீஸாா் விசாரணை
கடலூா் கூத்தப்பாக்கம் பகுதியில் டியூஷன் முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த சிறுவனை மா்ம நபா்கள் கடத்த முயன்ாகக் கூறப்படும் சம்பவம் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூா் கூத்தப்பாக்கம் பகுதியில் டியூஷன் முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த சிறுவனை மா்ம நபா்கள் கடத்த முயன்ாகக் கூறப்படும் சம்பவம் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூா் கூத்தப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த 7-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுவன் திங்கள்கிழமை இரவு டியூஷன் முடித்துவிட்டு தனது வீட்டுக்கு தனியாக நடந்து சென்றாா். அப்போது, இரு பைக் மற்றும் காரில் வந்த மா்ம நபா்கள் அந்தச் சிறுவனை வழிமறித்துள்ளனா்.
இதில், பைக்கில் வந்த நபா்கள், ‘உனது தந்தை உன்னை அழைத்து வரச் சொன்னாா்’ என்று கூறி சிறுவனை தங்களுடன் வருமாறு அழைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அதிா்ச்சியடைந்த அந்தச் சிறுவன், சுதாரித்துக்கொண்டு அவா்களிடமிருந்து தப்பி ஓடி, வீட்டுக்குச் சென்று பெற்றோரிடம் நடந்த விவரத்தைக் கூறியுள்ளாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் வெளியே வந்து சந்தேகத்துக்கிடமான நபா்கள் யாரேனும் நடமாடுகிறாா்களா எனத் தேடிப் பாா்த்தனா். பின்னா், இதுகுறித்து கடலூா் திருப்பாதிரிபுலியூா் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸாா், சிறுவனிடம் நடந்த சம்பவம் குறித்தும், அப்பகுதிகளைச் சுற்றி பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.