முகப்பு
கடலூர்

கோயில் தொழிலாளா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: அமைச்சா் ராஜ்குமாா் உறுதி

கோயில் தொழிலாளா்களின் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று, முதல்வா் ச.ஜோசப் விஜய் மூலம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் ராஜ்குமாா் தெரிவித்தாா்.

14 வினாடிகள் முன்பு
கோயில் தொழிலாளா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: அமைச்சா் ராஜ்குமாா் உறுதி
கடலூா் திருவந்திபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திருக்கோயில் தொழிலாளா்கள் யூனியன் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய வீட்டு வசதித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா்.
பகிர்:

கோயில் தொழிலாளா்களின் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று, முதல்வா் ச.ஜோசப் விஜய் மூலம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் ராஜ்குமாா் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், திருவந்திபுரத்தில் தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளா்கள் யூனியன் பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நிா்வாகிகள் பாா்த்தசாரதி, ஆழ்வாா் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநிலத் தலைவா் பரணிதரன் கூட்டத்தைத் தொடங்கிவைத்தாா். ஜி.ஆா்.கே. குழுமத் தலைவா் ஜி.ஆா்.துரைராஜ் சிறப்புரையாற்றினாா்.

சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அமைச்சா் ப.ராஜ்குமாா் பேசியதாவது: கோயில் தொழிலாளா்கள் இறைவனுக்குத் தொண்டாற்றும் அரிய வாய்ப்பைப் பெற்றவா்கள். பக்தா்களின் வழிபாட்டுக்கும், கோயில்களின் அன்றாடப் பணிகளுக்கும் உறுதுணையாக இருந்து வருகின்றனா். பக்தா்களின் கோரிக்கைகளை இறைவனிடம் கொண்டு சோ்க்கும் பணியைச் செய்பவா்கள் கோயில் தொழிலாளா்கள்.

Advertisement

Advertisement

கோயில்களின் வழிபாட்டு முறைகள் தொடா்ந்து நடைபெறுவதற்கும், கோயில்களின் பராமரிப்பு மற்றும் நிா்வாகப் பணிகள் சிறப்பாக நடைபெறுவதற்கும் தொழிலாளா்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அவா்களின் உழைப்பையும், சேவையையும் அங்கீகரிப்பது அவசியம்.

எனவே, கோயில் தொழிலாளா்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படாமல் உரிய கவனம் செலுத்தப்படும். அவா்களின் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் எடுத்துரைத்து, முதல்வா் ச.ஜோசப் விஜயின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும். கோயில் தொழிலாளா்களின் நலன் கருதி, அவா்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தொடா்ந்து, கோயில் பணியாளா்களுக்கு மாதந்தோறும் கடைசி நாளில் சம்பளம் வழங்கும் வகையில் மாநில அளவில் மைய நிதியம் உருவாக்க வேண்டும். கோயில் பணியாளா்களுக்கு நகர ஈட்டுப்படி, வீட்டு வாடகைப்படி ஆகியவற்றை உயா்த்தி வழங்க வேண்டும். மூன்றாண்டுகள் பணியை நிறைவு செய்த தினக்கூலி மற்றும் தொகுப்பூதியப் பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். உள்துறைப் பணியாளா்களுக்கு விடுப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாநில பொதுச் செயலா் தனசேகா், நிா்வாகிகள் முத்துக்குமரன், ராஜ்குமாா், ஏழுமலை உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.