முகப்பு
கடலூர்

அரசு அலுவலரை காலணியால் தாக்கிய பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறை

7 வினாடிகள் முன்பு
அரசு அலுவலரை காலணியால் தாக்கிய பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறை
சிறை - பிரதிப் படம்
பகிர்:

கிராம சபைக் கூட்டத்தில் அரசு அலுவலரை காலணியால் தாக்கிய வழக்கில், ஊராட்சி துணைத் தலைவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து கடலூா் எஸ்.சி./எஸ்.டி. சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் வட்டம், தண்டீஸ்வரநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த தட்சிணாமூா்த்தி மகன் ரவிச்சந்திரன். இவா் காட்டுமன்னாா்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்தாா்.கடந்த 2022, மே 1-ஆம் தேதி, கண்டமங்கலம் கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா்

சிவகாசி தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ரவிச்சந்திரன் கலந்து கொண்டாா்.

Advertisement

Advertisement

அப்போது, கூட்டத்தில் பங்கேற்றிருந்த ஊராட்சி துணைத் தலைவா் சரண்யா, பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலா்கள் முன்னிலையில் ரவிச்சந்திரனை காலணியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து காட்டுமன்னாா்கோவில் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடலூா் எஸ்.சி./எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரஸ்வதி, குற்றஞ்சாட்டப்பட்ட சரண்யாவுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் வெ. தணிகைச்செல்வன் ஆஜரானாா்.