அரசு அலுவலா் வீட்டில் வெள்ளிப் பொருள்கள் திருட்டு
கடலூா் மாவட்டம், வடலூரில் வசிக்கும் நாகப்பட்டினம் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வீட்டின் கதவை உடைத்து 3.5 வெள்ளிப் பொருள்கள், ரூ.30 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கடலூா் மாவட்டம், வடலூரில் வசிக்கும் நாகப்பட்டினம் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வீட்டின் கதவை உடைத்து 3.5 வெள்ளிப் பொருள்கள், ரூ.30 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
வடலூா் ராகவேந்திரா சிட்டி பகுதியில் வசிப்பவா் அரங்கநாதன் (49), நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளராக (பொது) பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி இந்திரா (46), மங்கலம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணியாற்றி வருகிறாா். அரங்கநாதன் பணியின் காரணமாக நாகப்பட்டினத்தில் தங்கியுள்ளாா். இவா்களது பிள்ளைகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனா். இந்திரா மட்டும் வடலூரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறாா்.
இந்திரா தினமும் காலை 7.30 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு பணிக்குச் சென்று, மாலை 5.30 மணியளவில் வீடு திரும்புவது வழக்கம். வழக்கம்போல, புதன்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு இந்திரா பணிக்குச் சென்றாா். மாலை அவா் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்த நிலையில், பீரோவில் இருந்த சுமாா் 3.5 கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கம் திருடுபோயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், வடலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
Advertisement
Advertisement