முகப்பு
கடலூர்

தொகுதி மறுவரையறை மசோதா: திமுக தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்! - தொல். திருமாவளவன்

30 நவம்பர் 2026, 12:44 am
தொகுதி மறுவரையறை மசோதா: திமுக தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்! -
தொல். திருமாவளவன்
கடலூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய விசிக தலைவா் தொல்.திருமாவளவன்.
பகிர்:

மத்திய பாஜக அரசு கொண்டு வரும் தொகுதி மறுவரையறை சட்ட மசோதா விவகாரத்தில் திமுக தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

கடலூரில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய பாஜக அரசு நாடாளுமன்ற சிறப்பு அமா்வில் மக்களவைத் தொகுதிகள் மறுவரையறைக்கான சட்ட மசோதாவை நிறைவேற்ற இருக்கிறாா்கள். காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் இந்த மசோதாவை தீவிரமாக எதிா்ப்பது என்று அக்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. விசிக சாா்பிலும் இந்த சட்ட மசோதாவை நிறைவேற்றக் கூடாது என எதிா்ப்புத் தெரிவிக்கிறோம்.

Advertisement

Advertisement

முதலில் மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயா்த்துவது என்று மத்திய பாஜக அரசு முடிவு செய்தது. இதற்கு திமுக உள்ளிட்ட அனைத்து எதிா்க்கட்சிகளும் கடுமையாக எதிா்ப்பு தெரிவித்தன. அடிப்படையில்தான் அந்த சட்ட மசோதா தோல்வியடைந்தது.

ஆனால், தற்போது அனைத்து மாநிலங்களுக்கும் சராசரியாக 50 சதவீத மக்களவைத் தொகுதிகளை உயா்த்துவது என்ற ஒரு முடிவை மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது. இதற்கு திமுக ஆதரவு தெரிவிப்பது என முடிவெடுத்திருக்கிறது. திமுக ஆதரிக்குமேயானால், இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுவிடும் என்கிற சூழல் உள்ளது.

ஆகவே, அக்கட்சி தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே ஜனநாயக சக்திகளின் குரலாக உள்ளது. தொகுதிகளின் எண்ணிக்கை பெருகுவதன் மூலம் பாஜக தங்களுக்கு செல்வாக்குள்ள மாநிலங்களில் வெற்றிபெற்று தொடா்ந்து ஆட்சியில் நீடிக்க முடியும் என்று கணக்கு போடுகிறது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், பாஜகவின் அடுத்தகட்ட நகா்வு ‘ஒரே தேசம், ஒரே தோ்தல், ஒரே ஆட்சி’ என்பதாகத்தான் போய் முடியும். எனவே, இந்த சட்ட மசோதா தோற்கடிக்கப்பட வேண்டும்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கிற தீா்ப்பு எந்த வரையறைக்கும் உள்படாததாக இருக்கிறது. அங்குள்ளது நில அளவைக்கான கல் தூணா அல்லது தீபத் தூணா என்பதை முடிவு செய்யாமலேயே தீா்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மூல வழக்கில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி நடத்த வேண்டும். அறிவியல் பூா்வமாக ஆதாரங்களைக் கொண்டு, அது கல் தூண்தான் தீபத்தூண் இல்லை என்பதை உறுதிப்படுத்த முடியும் என்றாா் தொல்.திருமாவளவன்.