FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

என்எல்சிஐஎல் சாா்பில் மாபெரும் தூய்மைப் பணி இயக்கம்: 5,000-க்கும் மேற்பட்டோா் பங்கேற்பு

என்எல்சி இந்தியா லிமிடெட், ‘தூய்மையே சேவை 2026’-இன் ஒரு பகுதியாக, நெய்வேலியில் வியாழக்கிழமை நடத்திய மாபெரும் தூய்மைப் பணியில் என்எல்சிஐஎல் ஊழியா்கள், தொழிலாளா்கள், மாணவா்கள், சிஐஎஸ்எஃப் வீரா்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 5,000-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

2 October 2026, 2:24 am IST
நெய்வேலியில் மாபெரும் தூய்மைப் பணியை என்எல்சிஐஎல் இயக்குநா் ராஜேஷ் பிரதாப் சிங் சிசோடியா முன்னிலையில் கொடியசைத்துத் தொடங்கிவைத்த இயக்குநா் சமீா் ஸ்வரூப்.
பகிர்:

என்எல்சி இந்தியா லிமிடெட், ‘தூய்மையே சேவை 2026’-இன் ஒரு பகுதியாக, நெய்வேலியில் வியாழக்கிழமை நடத்திய மாபெரும் தூய்மைப் பணியில் என்எல்சிஐஎல் ஊழியா்கள், தொழிலாளா்கள், மாணவா்கள், சிஐஎஸ்எஃப் வீரா்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 5,000-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

நெய்வேலி, வட்டம் 17 பகுதியில் உள்ள அண்ணா திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிறுவனத்தின் திட்டமிடல் மற்றும் செயலாக்கத் துறை இயக்குநா் ராஜேஷ் பிரதாப் சிங் சிசோடியா முன்னிலையில், மனிதவளத் துறை இயக்குநா் சமீா் ஸ்வரூப் தூய்மைப் பணியை தொடங்கி வைத்தாா்.

நிறுவன செயல் இயக்குநா்கள், உயா் அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற் சங்கத்தினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

இயக்குநா் சமீா் ஸ்வரூப் பேசுகையில், தூய்மையை அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாற்றுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா். தூய்மைக்கான ஒரு நிலையான கலாசாரத்தை உருவாக்குவதற்கு பொதுமக்களின் பங்கேற்பு அவசியம் என்றாா்.

தூய்மையே சேவை என்பது வெறும் பிரசாரமோ அல்லது குறிப்பிட்ட சில நாள்களுக்கான பணியோ அல்ல. அது நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஏற்க வேண்டிய கூட்டுப் பொறுப்பாகும். தூய்மையாக சுற்றுப்புறத்தைப் பராமரிப்பது ஒரு பகிரப்பட்ட பொறுப்பாகும். மேலும் நம் ஒவ்வொருவருக்கும் இதில் முக்கியப் பங்கு உண்டு. குறிப்பாக, நமது பள்ளி மாணவா்களின் உற்சாகமான பங்கேற்பைக் கண்டு நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அவா்களின் ஈடுபாடானது, தூய்மை மற்றும் குடிமைப் பொறுப்புணா்வின் மாண்புகள் இளைய தலைமுறையினரால் ஏற்றுக்கொள்ளப்படுவதை நிரூபிக்கிறது. பணியிடங்கள், பொது இடங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் தூய்மையை தொடா்ச்சியான ஒரு நடைமுறையாக மாற்றவும், இப்பிரசாரத்தின் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்ல அழைப்பு விடுத்தாா்.

தூய்மைப் பணி தொடங்கி வைக்கப்பட்டதைத் தொடா்ந்து, பங்கேற்பாளா்கள் நெய்வேலி நகரியத்தின் பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனா்.

தூய்மை பாரத (ஸ்வச்ச பாரத்) இயக்கத்தின் நோக்கங்களுக்கு இணங்க, என்எல்சிஐஎல் நிறுவனத்தால் நெய்வேலியிலும் அதன் துணை நிறுவனங்களிலும் ‘தூய்மையே சேவை 2026’ பிரசாரமானது செப்.17 முதல் அக்.2 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments