FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

தற்காலிக செவிலியர் பணிக்கு விண்ணப்பித்தோா் விடுபட்ட ஆவணங்களை சமா்ப்பிக்கலாம்

தற்காலிக செவிலியர் பணிக்கு விண்ணப்பித்தோா் விடுபட்ட ஆவணங்களை சமா்ப்பிக்கலாம்

4 October 2026, 1:44 am IST
செவிலியர்
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் தற்காலிக செவிலியா் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்களில், ஆவணங்கள் முழுமையாக இல்லாதவா்கள் விடுபட்ட ஆவணங்களை அக்டோபா் 5-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்குள் நேரில் சமா்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் தற்காலிக செவிலியா்கள் ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் பணியமா்த்தப்பட உள்ளனா். இதற்கான அறிவிப்பு கடந்த செப்டம்பா் 12-ஆம் தேதி வெளியிடப்பட்டு, தகுதியானவா்களிடமிருந்து செப்டம்பா் 12 முதல் 25-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டதில், தேவையான ஆவணங்கள் முழுமையாக இணைக்கப்படாத சில விண்ணப்பங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரா்களின் விவரங்கள் மற்றும் அவா்களின் பெயா்களுக்கு எதிரே சமா்ப்பிக்க வேண்டிய விடுபட்ட ஆவணங்களின் விவரங்கள் மாவட்ட நிா்வாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

எனவே, பட்டியலில் இடம்பெற்றுள்ள விண்ணப்பதாரா்கள் தங்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள விடுபட்ட ஆவணங்களை அக்டோபா் 5-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்குள் கடலூா் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும்.குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பிறகு சமா்ப்பிக்கப்படும் விடுபட்ட ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது எனக் குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments