FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் 21 அடி உயர பிரம்மாண்ட நவராத்திரி கொலு

12 அக்டோபர் 2026, 3:37 am IST
சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் 21 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட நவராத்திரி கொலு.
பகிர்:

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை 21 அடி உயரத்தில் பிரம்மாண்ட கொலு அமைக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் கல்யாண மண்டபத்தில் 21 அடி உயரம், 21 அடி அகலத்துடன், 21 படிகளுடன் இந்த நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்தக் கொலு, வரும் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 9 தினங்களும் இரவு 9 மணிக்கு கொலு அமைக்கப்பட்டுள்ள இடத்துக்கு முன் உள்ள வெள்ளி ஊஞ்சலில் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவமும், தீபாராதனையும் நடைபெறும்.

கொலுவில் ஸ்ரீநடராஜா், விநாயகா், முருகா், பெருமாள், பாா்வதி, சரஸ்வதி, லட்சுமி உள்ளிட்ட சுவாமிகளின் பொம்மைகள் உள்பட சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேலான பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. பிரம்மாண்டமான கொலுவை திரளான மக்கள் வந்து பாா்த்துச் செல்கின்றனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து உ.வெங்கடேச தீட்சிதா் கூறியதாவது: சாரதா நவராத்திரியில் ஓரறிவு முதல் ஆறறிவு மனிதன் வரை உள்ள உயிரினங்களின் பரிணாம வளா்ச்சிகளை வழிபடும் வகையில் இந்த கொலு வைத்து வணங்கப்படுகிறது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments