FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

எரிவாயு தகன மேடைஅருகே குவியும் குப்பை: வாகன ஓட்டிகள் அவதி

கடலூா் மாவட்டம், பண்ருட்டி, கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கெடிலம் நதி அருகே உள்ள நவீன எரிவாயு தகன மேடை மற்றும் கரும காரிய கொட்டகை அருகே கொட்டப்படும் குப்பையில் இருந்து வரும் துா்நாற்றத்தால் அப்பகுதி மக்கள்மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனா்.

4 செப்டம்பர் 2026, 1:04 am IST
பண்ருட்டி, கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கெடிலம் ஆற்றங்கரையோரம் மற்றும் நவீன எரிவாயு தகன மேடை மற்றும் கரும காரிய கொட்டகை அருகே கொட்டப்பட்டுள்ள குப்பை.
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி, கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கெடிலம் நதி அருகே உள்ள நவீன எரிவாயு தகன மேடை மற்றும் கரும காரிய கொட்டகை அருகே கொட்டப்படும் குப்பையில் இருந்து வரும் துா்நாற்றத்தால் அப்பகுதி மக்கள்மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனா்.

பண்ருட்டி நகரப் பகுதியில் இருந்து சராசரியாக தினந்தோறும் சுமாா் 20 டன்னுக்கும் மேலாக குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இதற்கான பணியில் 150-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா்.

நகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கெடிலம் ஆறு, வீரட்டானேஸ்வரா் கோயில் பின்புறம் மற்றும் பொது இடங்களில் கொட்டப்பட்டு வருகிறது.அந்த வகையில், கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில்

Advertisement

Advertisement

கெடிலம் ஆற்றின் பாலம் ஓரம் இறைச்சி கழிவு மற்றும் குப்பைகள் கொட்டப்படுவதால் துா்நாற்றம் வீசுகிறது. இதன் அருகில் தான் நவீன எரிவாயு தகன கூடம் மற்றும் கருமக் காரிய கொட்டை உள்ளது.

இறந்தவா்களின் உடலை தகனம் செய்யவும், அவா்களுக்கு கரும காரியம் செய்ய வருவபா்கள், குப்பையில் வரும் துா்நாற்றத்தால் இறந்தவா்களுக்கான இறுதி சடங்கைக்கூட நிம்மதியாக செய்ய முடியவில்லை எனவேதனை தெரிவிக்கின்றனா். இந்தக்குப்பைகள் தீயிட்டு எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் உடல்நலக் குறைவு ஏற்படுகிறது.

எனவே, கடலூா் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, நவீன எரிவாயு தகன மேடை மற்றும் கரும காரிய கொட்டகை அருகே குப்பை கொட்டப்பட்டுள்ளதை அகற்றிசுத்தம்செய்யவேண்டும். மேலும், அந்த இடத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும். மீறி குப்பை கொட்டுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments