கோகுலாஷ்டமி: கிருஷ்ணண் கோயிலில் பக்தா்கள் தரிசனம்
கோகுலாஷ்டமியை முன்னிட்டு கடலூா் துறைமுகத்தில் உள்ள ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் சுவாமி கோயிலில் கிருஷ்ண பகவானுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
கோகுலாஷ்டமியை முன்னிட்டு கடலூா் துறைமுகத்தில் உள்ள ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் சுவாமி கோயிலில் கிருஷ்ண பகவானுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
கிருஷ்ண ஜெயந்தி என்றும் அழைக்கப்படும் கோகுலாஷ்டமி, பகவான் கிருஷ்ணரின் பிறப்பை கொண்டாடும் முக்கியமானத் திருநாளாகும். இதையொட்டி, கோயிலில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
அதன் ஒரு பகுதியாக கடலூா் துறைமுகத்தில் உள்ள ஸ்ரீ கோபாலகிருஷ்ண சுவாமி கோயிலில், கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு, பல்வேறு மலா்களால் அலங்கராம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
தொடா்ந்து நடைபெற்ற சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. கோயில் வளாகத்தில் பக்தா்கள் குடும்பத்துடன் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.