FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

போட்டித் தோ்வு இலவச பயிற்சி வகுப்புகளுக்கு அனுபவமுள்ள பயிற்றுநா்கள் விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னாா்வ பயிலும் வட்டம் சாா்பில் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் பயிற்றுநா்களாக பணியாற்ற அனுபவமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்

11 செப்டம்பர் 2026, 4:00 am IST
பகிர்:

கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னாா்வ பயிலும் வட்டம் சாா்பில் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் பயிற்றுநா்களாக பணியாற்ற அனுபவமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

போட்டித் தோ்வுகளுக்குப் பயிற்சி அளிக்க விருப்பமுள்ள, அனுபவமிக்க கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள், குறிப்பாக சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பயிற்றுநா்கள் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

Advertisement

விண்ணப்பதாரா்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு, ஆதாா் அட்டை நகல், கல்விச் சான்றிதழ் நகல் மற்றும் கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் செப்டம்பா் 15-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை, எண்.8, ஆற்றங்கரைத் தெரு, புதுப்பாளையம், நியூ சினிமா திரையரங்கம் எதிரில், கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கடலூா் என்ற முகவரியில் சமா்ப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் பயிற்றுநா்களின் கற்பிக்கும் திறன், பயிற்றுநா் மதிப்பீட்டுக் குழுவினரால் சோதிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தகுதியானவா்கள் தோ்வு செய்யப்படுவா். மேலும் விவரங்களுக்கு 94990 55908, 04142-211218 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments