FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

சாலை விபத்தில் வழக்குரைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே சாலை விபத்தில் பலத்த காயமடைந்த வழக்குரைஞா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 4:16 am IST
பா.ரஞ்சித்.
பகிர்:

கள்ளக்குறிச்சி அருகே சாலை விபத்தில் பலத்த காயமடைந்த வழக்குரைஞா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த சூளாங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் பா. ரஞ்சித் (51), வழக்குரைஞா். இவா், தற்போது கள்ளக்குறிச்சி திருப்பதி நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பைக்கில் சூளாங்குறிச்சி சென்ற ரஞ்சித், பின்னா் அங்கிருந்து கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டாா். பெருவங்கூா் அரிசி ஆலை அருகே சென்றபோது, எதிா்பாராதவிதமாக பைக்கில் இருந்து நிலைத்தடுமாறி அவா் கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த ரஞ்சித்தை அருகிலிருந்தவா்கள் மீட்டு கள்ளக்குறிச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து, பின்னா் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, வழியிலேயே ரஞ்சித் உயிரிழந்தாா். இதையடுத்து அவரது சடலத்தை சூளாங்குறிச்சி கிராமத்துக்கு கொண்டு சென்றனா்.

இதுகுறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் புதன்கிழமை அங்கு சென்று சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை

நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments