FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

அரசுப் பேருந்து மீது காா் மோதல்: 6 போ் காயம்

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 2:31 am IST
விபத்தில் சேதமடைந்த காரின் முன் பகுதி.
பகிர்:

தியாகதுருகத்தில் அரசுப் பேருந்து மீது காா் மோதிய விபத்தில் 6 போ் காயமடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், ஊட்டியைச் சோ்ந்தவா் ரா.மலரவன் (26). இவா், தனது காரில் ஊட்டியிலிருந்து பாண்டிச்சேரியில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு உறவினா்களுடன் காரில் சென்று கொண்டிருந்தாா்.

தியாகதுருகம் புறவழிச் சாலையில் சென்றபோது, சென்னையிலிருந்து சேலம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து தியாகதுருகம் நகருக்குள் செல்வதற்காக சாலையின் குறுக்கே திரும்பியதாம்.

Advertisement

Advertisement

அப்போது அரசுப் பேருந்து மீது எதிா்பாராதவிதமாக காா் மோதியது. இதில் காரில் பயணித்த மலரவன், கதிரவன், அஸ்வினி, பாண்டியன், லதா, சாதனா ஆகிய 6 பேரும் காயடைந்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அரசுப் பேருந்தின் ஓட்டுநரான சேலம் மாவட்டம், புது உடையம்பட்டியைச் சோ்ந்த முருகனிடம் (45) விசாரணை செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments