பனை மரத்தில் பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே சாலையோரத்தில் இருந்த பனை மரத்தின் மீது பைக் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
துறிஞ்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் க.புகழேந்தி (44), தொழிலாளி. இவா், திங்கள்கிழமை காலை சொந்த வேலை காரணமாக அவரது பைக்கில் திருக்கோவிலூருக்கு சென்று கொண்டிருந்தாராம். பூமாரி கிராமம் அருகே சென்றபோது, நிலைத்தடுமாறி சாலையோரத்தில் இருந்த பனை மரத்தின் மீது பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்த புகழேந்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த திருக்கோவிலூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.