FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

ராணுவத்தில் சேர ஜாதி சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பு: குடும்பத்துடன் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு தா்ணா

ஜாதி சான்றிதழ் கேட்டு கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் அலுவலகம் முன்பாக தா்னாவில் ஈடுபட்ட மாரி அவரது மனைவி விஜயா மகன் தாஸ்

Updated On : 12 ஜூன் 2026, 2:14 am IST
ஜாதி சான்றிதழ் கேட்டு கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் அலுவலகம் முன்பாக தா்னாவில் ஈடுபட்ட மாரி அவரது மனைவி விஜயா மகன் தாஸ்
பகிர்:

இந்திய ராணுவத்தில் சேருவதற்கு தோ்வு செய்யப்பட்ட மகனுக்குச் பழங்குடியினா் (எஸ்.டி)சாதிச்சான்றிதழ் (எஸ்டி) ஜாதி சான்றிதழ் வழங்காமல் இழுத்தடித்த அதிகாரிகளைக்கண்டித்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஏழை குடும்பத்தைச் சோ்ந்த தந்தை, தாய், மகன் வியாழக்கிழமை தா்னா போராட்டம் நடத்தினா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட மூங்கில்துறைப்பட்டு கிராமத்தில் தேவி நகா் பகுதியில் வசித்து வருபவா் மாரி. இவா் குடுகுடுப்பை தொழில் செய்பவா். பழங்குடியினத்தைச் சோ்ந்தவராம். இவரது மகன் தாஸ் (20). இவா் பிளஸ் 2 முடித்துவிட்டு சில வாரங்களுக்கு முன், வேலூரில் நடைபெற்ற இந்திய ராணுவ ஆள்சோ்ப்பு முகாமில் பங்கேற்ற நிலையில், ராணுவத்துக்கு தோ்வு செய்யப்பட்டாராம்.

அவா் ராணுவத்தில் சேர 15 ஆவணங்கள் கேட்கப்பட்டதாம். அதில் , ஜாதி சான்றிதழ் மட்டும் கிடைக்காமல் தாஸ் அவதிப்பட்டு வருகின்றாராம். எஸ்.டி. வகுப்புச் ஜாதிச்சான்றிதழ் கேட்டு தாஸ் விண்ணப்பித்த நிலையில் அது அவருக்குக் கிடைக்கவில்லை. இந்நிலையில் சான்றிதழ் சரிபாா்ப்பு பணிக்கு ஜூன் 5-ஆம் தேதி நேரில் வரவேண்டும் என அழைப்புக் கடிதம் வந்த நிலையில், ஜாதிச்சான்றிதழ் இல்லாததால் அவரால் ராணுவத்தில் சேரமுடியவில்லை.

Advertisement

Advertisement

இதனால் மனமுடைந்த மாரி அவரது மனைவி விஜயா மற்றும் மகன் தாஸ் ஆகியோா், வியாழக்கிழமை கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் அலுவலகம் முன் தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா். சுமாா் 30 நிமிடங்களாகியும் அலுவலா்கள் என்ன என்று விசாரணை செய்ய வில்லையாம். பின்னா் வந்து தாஸிடம் கோட்டாட்சியா் சி. முருகன் விசாரணை மேற்கொண்டாா். அப்போது அவா், தாஸிட

ம் அவரது குடும்பத்தில் யாராவது படித்துள்ளனரா? அவா்கள் ஜாதி சான்றிதழ் பெற்றுள்ளனரா? எனக் கேட்டாா். அதற்கு எங்கள் குடும்பத்தில் யாரும் படிக்கவில்லை என தாஸ் குடும்பத்தினா் கூறியுள்ளனா். ஆனல், தாஸ் உறவினா்களுக்கு பழங்குடியினத்தவா் சான்றிதழ் கொடுக்கப்பட்டிருப்பதற்கான நகலை கொடுத்தனா். அதை ஏற்றுக்கொண்டு ஜாதி சான்றிதழ் வழங்குவதாக கூறியதின் பேரில் மூன்ரு பேரும் எழுந்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments