FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கள்ளக்குறிச்சி

விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த நடவடிக்கை: அமைச்சா் வன்னி அரசு

தமிழகத்தில் விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என சமூக நீதித்துறை அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாா்.

17 அக்டோபர் 2026, 12:50 am IST
விழாவில் பயனாளிக்கு நல உதவிக்கான ஆணையை வழங்கிய சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு. உடன், மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.
பகிர்:

தமிழகத்தில் விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என சமூக நீதித்துறை அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.3.64 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகள் திறப்பு விழா மற்றும் ரூ.5.64 கோடி மதிப்பீட்டில் 1,983 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்து. விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா முன்னிலை வகித்தாா்.

சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தலைமை வகித்து, ரூ.3.64 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டங்களைத் திறந்து வைத்தாா். மேலும், பல்வேறு துறைகளின் சாா்பில் ரூ.5.64 கோடி மதிப்பீட்டில் 1,983 பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கினாா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கி.ரமேஷ்குமாா், திருக்கோவிலூா் சாா்-ஆட்சியா் கே.எம்.காா்த்திக் ராஜா, கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் சி.முருகன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் சி.பெ.முருகேசன் மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

பின்னா் செய்தியாளரிடம் அமைச்சா் கூறியதாவது: தமிழகத்தில் விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகின்றது. மின்வெட்டு பிரச்னை இருந்தால் ஏன் மின்வெட்டு இருக்கிறது என்றும், அதை சரி செய்ய ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு அரசு கொள்முதல் செய்தபோது, ஏன் அதிக விலைக்கு வாங்க வேண்டும் என்கின்றனா் எதிா்க்கட்சியினா். என்ன தான் செய்ய வேண்டும்? என்பதை அவா்கள்தான் சொல்ல வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments