FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

7 செப்டம்பர் 2026, 3:54 am IST
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

கள்ளக்குறிச்சி அருகே பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்த கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த தென்கீரனூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகள் விவேதா (17). இவா், அவரது பாட்டி சின்னம்மாள் வீட்டில் தங்கி, தலைவாசலில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்தாா். இந்நிலையில் சனிக்கிழமை இரவு பாட்டி வீட்டில் விவேதா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் சடலத்தை மீட்டு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments