FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிகப்புக் கண்ணாடி நாடக விழா

புதுவையில் யாழ் கலை மையம் சார்பில் சிகப்புக் கண்ணாடி நாடக விழா அண்மையில் நடைபெற்றது.

9 ஜனவரி 2024, 11:05 am
பகிர்:

புதுவையில் யாழ் கலை மையம் சார்பில் சிகப்புக் கண்ணாடி நாடக விழா அண்மையில் நடைபெற்றது.

 இம்மையம் சார்பில் நாடகம், ஓவியம், சிற்பம், இசை போன்றவற்றில் பள்ளி மாணவர்களுக்கான கலைப்பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படுகின்றன. கலைஞர்கள் குறித்த ஆவணப் படங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் பிரச்னைகளை சித்தரிக்கும் வகையில், சிகப்புக் கண்ணாடி என்ற நாடகம் புதுவை பல்கலைக்கழக கலாச்சார மையக் கூடத்தில் நடைபெற்றது.

Advertisement

Advertisement

 யாழ் கலை மையத் தலைவர் ஞா.கோபி நாடகத்தை இயக்கி இருந்தார். சோரப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி செளமியா, ப்ரீத்தா, திவ்யா, எழிலி, அரசு ஆகியோர் நாடகத்தில் பங்கேற்று நடித்தனர்.

 நாடக விமர்சகர் வெளி ரங்கராஜன், எழுத்தாளர் அரியநாச்சி, யாத்ரா சீனிவாசன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சர்வேஸ்வரன், பேராசிரியர் ரவீந்திரன் ஆகியோர் நாடகத்தின் சிறப்புகள் குறித்து விவரித்தனர். இந்நாடகம் வரும் 28-ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ள நாடக விழாவில் அரங்கேற்றத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.