கூட்டுறவு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கூட்டுறவு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கூட்டுறவு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
மாநில அரசின் கட்டுப்பாட்டில், புதுச்சேரியில் கூட்டுறவு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும். தவணை முறையில் கட்டணத்தை செலுத்த அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதன்கிழமை வகுப்புகளை புறக்கணித்து தர்னாவில் ஈடுபட்டனர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்க பொறுப்பாளர் உதயம் தலைமை வகித்தார். ருத்ரா, சிவக்குமார் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.