வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஆற்றுப்படுத்த ஜிப்மரின் சேவை எண் அறிவிப்பு
கேரள வெள்ளத்தில் மன ரீதியாக பாதிக்கப்பட்டவர்களை ஆற்றுப்படுத்தும் விதமாக ஜிப்மர் சார்பில், சேவை மைய எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள வெள்ளத்தில் மன ரீதியாக பாதிக்கப்பட்டவர்களை ஆற்றுப்படுத்தும் விதமாக ஜிப்மர் சார்பில், சேவை மைய எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் மன ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்க ஜிப்மர் மருத்துவமனை சார்பில், ஆலோசனை மையம் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தச் சேவை மையம் 24 மணி நேரமும் செயல்படும். அதன்படி, 78670 86311 என்ற எண்ணில் மையத்தை திங்கள்கிழமை காலை 9.30 மணி முதல் தொடர்பு கொண்டு ஆலோசனைகள் பெறலாம் என ஜிப்பர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ நிவாரண உதவிகளை வழங்கும் வகையில், ஜிப்மர் பேரிடர் மேலாண்மை மருத்துவக் குழுவினர் பேராசிரியர் ஜெகதீஸ் மேனன், மருத்துவர் பிளஸ்ஸி ஜான், செவிலியர் அதிகாரி ஹெவோலி பிரபா ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றனர்.
இந்தக் குழுவில் 34 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் தொடர்ந்து அங்கு மருத்துவச் சேவையாற்ற உள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.