தமிழக முதல்வருக்கு புதுச்சேரியில் வரவேற்பு
புதுச்சேரிக்கு புதன்கிழமை வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
புதுச்சேரிக்கு புதன்கிழமை வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நாகை மாவட்டத்துக்கு செல்லும் வழியில் புதுச்சேரிக்கு காரில் வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிமேடு பகுதியில் புதுவை மாநில அதிமுக செயலர் புருசோத்தமன், அதிமுக பேரவைக் குழுத் தலைவர் ஆ.அன்பழகன் ஆகியோர் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் வையாபுரி மணிகண்டன், ஆ.பாஸ்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
மேலும், புதுவையில் கட்சி வளர்ச்சிக்காக ஆற்றி வரும் பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அவர்கள் விளக்கினர். அதைத்தொடர்ந்து நூறடி சாலையில், முதல்வர் பழனிசாமிக்கு, முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் தலைமையில் அதிமுகவினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாகை மாவட்டத்துக்கு காரில் புறப்பட்டுச் சென்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.