ராவண காவிய தொடர் சொற்பொழிவு
புதுச்சேரியில் ராவண காவிய தொடர் சொற்பொழிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரியில் ராவண காவிய தொடர் சொற்பொழிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுவை, தமிழகம் இணைந்த பகுத்தறிவாளர் கழகம், புலவர் குழந்தை இயற்றிய ராவண காவியம் என்னும் இலக்கியம் பற்றிய தொடர்சொற்பொழிவை முனைவர் க.தமிழமல்லனை கொண்டு ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. அந்த வகையில் 14-ஆவது சொற்பொவு புதுவை தமிழ்ச் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராவண காவியத்தின் பழிபுரி காண்டத்தின் மூன்று படலங்கள் பற்றித் தனித் தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் தமிழமல்லன் உரையாற்றினார். பீடணப்படலம், ஏவற்படலம் ஆகிய படலங்கள் கூறும் நிகழ்ச்சிகளை கம்பராமாயணத்துடன் ஒப்பிட்டு அவர் உரையாற்றினார்.
புதுவை தமிழ்ச் சங்க அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தலைவர் மு.ந.நடராசன் தலைமை வகித்தார். புதுவை திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி, தினமணியின் முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன் படத்தைத் திறந்துவைத்துப் பேசினார். நிகழ்ச்சியில் இடம் பெற்ற பாட்டரங்கில் சாதிநெருப்பு என்னும் தலைப்பில் கவிஞர் ஆறு.செல்வம், கோயில்நுழைவு பற்றி கவிஞர் யாழ்த்தமிழன், விடுதலை பற்றி கவிஞர் மாநி, தீண்டாமை பற்றி கவிஞர் புதுவை கிருட்டினா ஆகியோர் கவிதை வாசித்தனர். முன்னதாக பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் நெ.நடராசன் வரவேற்றார். நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.