FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

பொங்கலையொட்டி பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள்

பொங்கல் பண்டிகையையொட்டி, பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த புதுச்சேரி அனைத்து விளையாட்டு மேம்பாட்டு அமைப்பு முடிவு செய்துள்ளது.

Updated On : 31 டிசம்பர் 2018, 8:33 am IST
பகிர்:

பொங்கல் பண்டிகையையொட்டி, பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த புதுச்சேரி அனைத்து விளையாட்டு மேம்பாட்டு அமைப்பு முடிவு செய்துள்ளது.
புதுவை மாநிலம், வில்லியனூர் அருகே உள்ள பத்துக்கண்ணு பகுதியில் இந்த அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தலைமை வகித்தார். பின்னர், அவர் கூறியதாவது: பொங்கல் தினத்தன்று வில்லியனூர் ஆச்சார்யா பள்ளியில் கோகோ,  பம்பரம், பல்லாங்குழி உறியடித்தல், கபடி, இசை நாற்காலி, நொண்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டிகளில் சுற்று வட்டப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள், மகளிர் கலந்து கொள்ள உள்ளனர். 3 நாள்கள் நடைபெற உள்ள போட்டியின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
மேலும், போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும் என்றார் அவர். 
கூட்டத்தில் உடல்பயிற்சி ஆசிரியர்கள்,  பல்வேறு விளையாட்டு கிளப் நிர்வாகிகள், இளைஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments