நீட் தரவரிசைப் பட்டியலை வெளியிட அரசுக்கு கோரிக்கை
நீட் தரவரிசைப் பட்டியலை புதுவை அரசு வெளியிட வேண்டும் என்று புதுவை மாநில மாணவர்கள் மற்றும் பெற்றோர் நலச் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன் கோரிக்கை விடுத்தார்.
நீட் தரவரிசைப் பட்டியலை புதுவை அரசு வெளியிட வேண்டும் என்று புதுவை மாநில மாணவர்கள் மற்றும் பெற்றோர் நலச் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன் கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து, சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவிடம் அளித்த மனு விவரம்:
ஜூன் 7-ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் சென்டாக் இணையதளத்தில் இளநிலை மருத்துவப் படிப்பு, பல் மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய உள்ளனர்.
ஆகையால், புதுவை மாநில மாணவர்களின் நீட் தரவரிசை பட்டியலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் இருந்து பெற்று சுகாதாரத் துறை இயக்குநரக இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
புதிய கல்விக் கட்டண குழு, ஓய்வுபெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் வியாழக்கிழமை கூட உள்ள நிலையில், சென்டாக் கலந்தாய்வு மூலம் அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவ எம்பிபிஎஸ், பிடிஎஸ், பொறியியல், செவிலியர், கால்நடை மருத்துவம் மற்றும் இதர பாடப்பிரிவில் சேர உள்ள மாணவர்களின் கல்விக் கட்டணம் எக்காரணத்தை முன்னிட்டும் உயர்த்தக்கூடாது.
அரசு மருத்துவக் கல்லூரியில் மொத்தம் உள்ள 150 மருத்துவ இடங்களில் 23 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 22 இடங்கள் வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டுக்கு போக மீதமுள்ள 105 இடங்களை மட்டுமே புதுவை மாநில மாணவர்களை கொண்டு நிரப்பப்பட வேண்டிய நிலையுள்ளது.
ஆகையால், இந்தக் கல்வியாண்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து அதிகப்படியான அரசு ஒதுக்கீடாக பெற வேண்டும். மாணவர்கள் ஆன்லைன் மூலம் சென்டாக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க உள்ள நிலையில், சமுதாயத்தில் பின்தங்கியுள்ள கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வி துறை மூலம் மாணவர்கள் சென்டாக் விண்ணப்பிக்க இலவச மையங்களை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.