"தூய்மை இந்தியா' விழிப்புணர்வு முகாம்
புதுச்சேரி கள விழிப்புணர்வு அலுவலகம், உழவர்கரை நகராட்சி ஆகியவை இணைந்து "தூய்மை இந்தியா' இயக்க விழிப்புணர்வு முகாமை புதன்கிழமை நடத்தின.
புதுச்சேரி கள விழிப்புணர்வு அலுவலகம், உழவர்கரை நகராட்சி ஆகியவை இணைந்து "தூய்மை இந்தியா' இயக்க விழிப்புணர்வு முகாமை புதன்கிழமை நடத்தின.
இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நகராட்சி ஆணையர் கந்தசாமி பேசியதாவது: நாம் வசிக்கும் நகரை தூய்மையாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது அனைவரின் பொறுப்பாகும். குறிப்பாக, மாணவர்களுக்கு இதில் அதிக அளவில் பங்கு உள்ளது. தன்னார்வமாக தூய்மைப் பணியில் மாணவர்கள் ஈடுபடுவதுடன், விழிப்புணர்வுப் பணியிலும் பங்கேற்க வேண்டும். இயற்கைப் பேரிடர்கள், கழிவு மேலாண்மை குறித்த பிரச்னைகள் ஆகியவற்றுக்கு 1070, 1077 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். நகராட்சியும் மக்களும் இணைந்து செயல்பட்டால்தான் நகரை தூய்மையாக மாற்ற முடியும் என்றார் அவர்.
நிகழ்ச்சிக்கு கள விழிப்புணர்வு உதவி இயக்குநர் தி.சிவக்குமார் தலைமை வகித்தார்.
முன்னதாக போப் ஜான்பால் கல்வியியல் கல்லூரி, அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை ஆணையர் கந்தசாமி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். மண்டல கள விழிப்புணர்வு அலுவலகத்தில் இதுகுறித்த கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.