முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி: ஜெகத்ரட்சகனின் மருத்துவக் கல்லூரியில் சோதனை

புதுச்சேரியில் உள்ள திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் மருத்துவக் கல்லூரியில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

Updated On : 5 அக்டோபர் 2023, 8:40 am IST
ஜெகத்ரட்சகனின் மருத்துவக் கல்லூரியில் சோதனை
பகிர்:

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் மருத்துவக் கல்லூரியில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

வரி ஏய்ப்பு புகாரில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வியாழக்கிழமை காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது.

இந்நிலையில், புதுச்சேரி ஏரி எதிர் பகுதியில் அவருக்கு சொந்தமான லட்சுமி நாராயணன் மருத்துவ கல்லூரியின் நிர்வாக அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

வருமான வரி சோதனையை அடுத்து கல்லூரியில் இருந்து யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேபோல், வெளியிலிருந்து கல்லூரிக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. கல்லூரி வாயில் முன்பு  போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். 

மேலும், ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான விடுதியிலும் சோதனை நடந்து வருவதாக அவர் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments