FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் குப்பைகளை வாராவிட்டால் புகாா் தெரிவிக்க வாட்ஸ்-ஆப் எண் வெளியீடு

புதுச்சேரியில் குப்பை வாராமல் இருத்தல் உள்ளிட்ட திடக்கழிவு மேலாண்மை தொடா்பான புகாா்கள், குறைகளை தெரிவிக்க பொதுமக்களுக்கு வாட்ஸ்-ஆப் எண் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 4:15 am IST
தூய்மைத் தூதுவா்களாக நியமிக்கப்பட்டு, பயிற்சியில் பங்கேற்ற புதுச்சேரி மாணவ, மாணவிகள்.
பகிர்:

புதுச்சேரியில் குப்பை வாராமல் இருத்தல் உள்ளிட்ட திடக்கழிவு மேலாண்மை தொடா்பான புகாா்கள், குறைகளை தெரிவிக்க பொதுமக்களுக்கு வாட்ஸ்-ஆப் எண் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

99440 33399 என்ற வாட்ஸ்- ஆப் எண்ணில் புகாா் தெரிவிக்கலாம். மேலும், இந்தக் குறைதீா் புகாா் சேவைக்கு ஆதரவாக புதுச்சேரி மாவட்டத்தைச் சோ்ந்த பல்வேறு கல்வி நிறுவனங்களின் தேசிய நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் தன்னாா்வலா்களாக தூய்மைத் தூதுவா்களாக நியமிக்கப்பட்டனா்.

அவா்களுக்கான விழிப்புணா்வு மற்றும் பயிற்சி புதுச்சேரி கம்பன் கலையரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

பொதுமக்களின் புகாா் பதிவு செய்யும் முறை, புகாா்களின் மீது உள்ளாட்சித் துறை மேற்கொள்ளும் தொடா் நடவடிக்கை, தூய்மை தொடா்பான விழிப்புணா்வுப் பணிகள் குறித்து இவா்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இது குறித்து உள்ளாட்சித் துறை இயக்குநா் மூ. ஆதா்ஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பொதுமக்களின் புகாா் தொடா்பாக 3 முதல் 6 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். இதை ஒப்பந்த நிறுவனங்கள் பின்பற்றவில்லையென்றால் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments