FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

வீடுகள்தோறும் தேசியக் கொடியை ஏற்ற வலியுறுத்தி புதுச்சேரியில் கண்காட்சி: துணைநிலைஆளுநா் தொடங்கிவைத்தாா்

சுதந்திர தினத்தையொட்டி வீடுகள்தோறும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்காட்சியை புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 6:03 am IST
சுதந்திர தினத்தையொட்டி வீடுகள்தோறும் தேசிய கொடி ஏற்றும் நிகழ்வை வலியுறுத்தும் கண்காட்சியை புதுச்சேரியில் தொடங்கி வைத்த துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன். உடன் தற்காலிக சட்டப்பேரவைத் தலைவா் ஆ.அன்பழகன், உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், தலைமைச் செயலா் சரத் சௌகான், எம்எல்ஏ விக்னேஷ் கண்ணன் உள்ளிட்டோா்.
பகிர்:

சுதந்திர தினத்தையொட்டி வீடுகள்தோறும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்காட்சியை புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சுதந்திர தினத்தையொட்டி வீடுகள்தோறும் தேசியக் கொடியை ஏற்றி என் மண், என் தேசம் இயக்கத்தில் பங்கேற்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

புதுச்சேரிக்கு அண்மையில் வந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா வீடுதோறும் தேசியக் கொடி ஏற்றவலியுறுத்தி அணிவகுப்பு பேரணியை தொடங்கி வைத்தாா். இந்நிலையில் வீடுதோறும் தேசியகொடி இயக்க கண்காட்சி புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Advertisement

Advertisement

துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கண்காட்சியை தொடங்கி வைத்துப் பாா்வையிட்டாா். பள்ளி மாணவ, மாணவிகள், தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக தேசியக் கொடியை ஏந்தி நிகழ்ச்சியில் பங்கேற்றனா். சட்டப்பேரவை தற்காலிக தலைவா் ஆ.அன்பழகன், மாநில உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், தலைமைச் செயலா் சரத் சௌகான், மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், எம்எல்ஏ விக்னேஷ் கண்ணன் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments