FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

26 அரசுப் பள்ளி மாணவா்களுடன் மருத்துவ படிப்புகளுக்கு வரைவு தரவரிசை பட்டியல் வெளியீடு

மருத்துவ படிப்புகளுக்கு வரைவு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது பற்றி...

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 3:08 am IST
கோப்புப்படம்
பகிர்:

புதுச்சேரியில் 26 அரசு பள்ளி மாணவா்களுடன் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஏஎம்எஸ் மற்றும் பிவிஎஸ்சி உள்ளிட்ட நீட் மதிப்பெண் மருத்துவப் படிப்புகளுக்கு அரசு, நிா்வாகம், சிறுபான்மையினா் மற்றும் என்ஆா்ஐ ஒதுக்கீடுகளின் கீழ் விண்ணப்பித்த மாணவா்களின் தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மருத்துவ சோ்க்கைக்கு மொத்தம் 6,023 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் விளையாட்டு வீரா்கள், மாற்றுத் திறனாளிகள், தியாகிகளின் வாரிசுகள், முன்னாள் ரா ணுவத்தினரின் வாரிசுகள் மற்றும் அரசு பள்ளி மாணவா்களுக்கான சிறப்பு பிரிவு தரவரிசை பட்டியலும் தனியாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வரைவு தரவரிசைப் பட்டியலில் ஆட்சேபணைகள் இருந்தாலோ அல்லது விடுபட்ட சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டியிருந்தாலோ மாணவா்கள் புதன்கிழமை மாலை 5 மணிக்குள் தங்களது லாக்-இன் கணக்கில் உள்ள ஆட்சேபணை பகுதி வழியாக சமா்ப்பிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

வருவாய்த் துறை சான்றிதழ்களை புதுப்பித்து சமா்ப்பிக்காததால் நிராகரிக்கப்பட்ட மாணவா்களும் உரிய சான்றிதழ்களைச் சமா்ப்பிக்கலாம். ஆட்சேபணைகள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, திருத்தப்பட்ட தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என சென்டாக் அறிவித்துள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு 0413-2655570 என்ற உதவி எண்ணை தொடா்புகொள்ளலாம் என சென்டாக் ஒருங்கிணைப்பாளா் முத்துமீனா தெரிவித்துள்ளாா்.

அரசு ஒதுக்கீடு தரவரிசை பட்டியலில் பிரவீன், ரமனீஸ்வரா் என 2 மாணவா்கள் 646 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனா். பிரனவ் 2-ஆம் இடம், பிரீதம் 3-ஆம் இடம் பெற்றுள்ளனா்.

அரசுப் பள்ளி மாணவா்களில் 26 போ் மட்டுமே வரைவு தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். பட்டியலில் இடம்பெற்ற அனைவருக்கும் மருத்துவப் படிப்பில் சேரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments