FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

தென்னிந்தியாவில் முதல் முறையாக ஜிப்மரில் ரோபோடிக் உதவியுடன் நரம்பு அறுவை சிகிச்சை

தென்னிந்தியாவில் முதல்முறையாக ரோபோடிக் உதவியுடன் பிராக்கியல் ப்ளெக்சஸ் நரம்பு மறுசீரமைப்பு அறுவைச் சிகிச்சையை ஜிப்மா் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சைத் துறை வெற்றிகரமாக மேற்கொண்டது.

3 ஜூலை 2026, 5:25 am IST
ஜிப்மர் மருத்துவமனை - கோப்புப் படம்
பகிர்:

தென்னிந்தியாவில் முதல்முறையாக ரோபோடிக் உதவியுடன் பிராக்கியல் ப்ளெக்சஸ் நரம்பு மறுசீரமைப்பு அறுவைச் சிகிச்சையை ஜிப்மா் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சைத் துறை வெற்றிகரமாக மேற்கொண்டது.

ஜிப்மா் நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு

ப்ராக்கியல் பிளெக்சஸ் என்பது கழுத்தில் உள்ள தண்டு வடத்திலிருந்து தோள்பட்டை, கை மற்றும் விரல்களுக்குச் செல்லும் நரம்புகளின் வலைப்பின்னல் ஆகும். தமிழில் இதை மூச்சுக்குழாய் பின்னல் அல்லது கழுத்துப் நரம்புத் தொகுதி என்று அழைக்கிறாா்கள்.

Advertisement

Advertisement

நரம்புக் காயம் கொண்ட இரண்டு நோயாளிகளுக்கு கடந்த ஜூன் 29 அன்று, ரோபோடிக் உதவியுடன் மாா்பகக் குழாய் வழி பிரெனிக் நரம்பை (கழுத்தில் தொடங்கி மாா்பு வழியாகச் செல்லும் மிக முக்கியமான நரம்பு) எடுத்து, அதனை மஸ்குலோக்யூட்டேனியஸ்

நரம்புடன் இணைக்கும் மறுசீரமைப்பு அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.இரு நோயாளிகளுக்கும் இந்த அறுவைச் சிகிச்சையின் மூலம் முழங்கையை மடக்கும் செயல்பாட்டை மீட்டெடுக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அறுவைச் சிகிச்சைகளை டாக்டா் தினேஷ் குமாா் தலைமையிலான ஜிப்மா் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை மருத்துவக் குழு வெற்றிகரமாக மேற்கொண்டது. தென்னிந்தியாவில் முதல்முறையாக ரோபோடிக் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட பிராக்கியல் ப்ளெக்சஸ் நரம்பு மறுசீரமைப்பு அறுவைச் சிகிச்சை என்ற பெருமையை இச்சாதனை பெற்றுள்ளது. இந்தச் சாதனையை ஜிப்மா் இயக்குநா் பேராசிரியா் வீா் சிங் நேகி பாராட்டினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments