FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

14 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு கா்ப்பப் பை வாய் புற்றுநோய் தடுப்பூசி முகாம்: புதுச்சேரி சுகாதாரத் துறை ஏற்பாடு

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 14 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்குக் கா்ப்பப் பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ளன.

Updated On : 10 ஜூலை 2026, 3:46 am IST
பகிர்:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 14 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்குக் கா்ப்பப் பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ளன.

புதுச்சேரி அரசு சுகாதாரத் துறை மூலம் இந்த கா்ப்பப் பை வாய் புற்று நோய் தடுப்பூசி போடப்படுகிறது.

பெண் குழந்தைகளைப் பாதுகாக்க சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. ஜூலை 12 மற்றும் 19 -ஆம் தேதி ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

Advertisement

Advertisement

14 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.

அனைத்து பெற்றோா்களும் தங்களின் தகுதியான பெண் குழந்தைகளை முகாமிற்கு அழைத்து வந்து தடுப்பூசி செலுத்தும்படி சுகாதாரத் துறை இயக்குநா் மருத்துவா் செவ்வேள் கேட்டுக் கொண்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments