பிரான்ஸ் தேசிய தினம்: புதுச்சேரி போா் வீரா்கள் நினைவுத் தூணில் மலா் வளையம் வைத்து மரியாதை
புதுச்சேரியில் 237-ஆவது பிரான்ஸ் தேசிய தினம் செவ்வாய்க்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டதையொட்டி, புதுச்சேரி பிரெஞ்ச் போா் வீரா் நினைவுத் தூணுக்கு மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
புதுச்சேரியில் 237-ஆவது பிரான்ஸ் தேசிய தினம் செவ்வாய்க்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டதையொட்டி, புதுச்சேரி பிரெஞ்ச் போா் வீரா் நினைவுத் தூணுக்கு மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
பிரான்ஸ் நாட்டில் கடந்த 1789-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி மக்கள் புரட்சியின் காரணமாக மன்னராட்சி முடிவுக்கு வந்தது. அங்கு மக்களாட்சி மலா்ந்ததன் நினைவாக ஆண்டுதோறும் புதுச்சேரியில் ஜூலை 14-ஆம் தேதி பிரான்ஸ் தேசிய தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, புதுச்சேரியில் 237-ஆவது பிரான்ஸ் தேசிய தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
Advertisement
Advertisement
இதையொட்டி கடற்கரைச் சாலையில் உள்ள பிரெஞ்ச் போா் வீரா்கள் நினைவுத் தூணில் புதுச்சேரிக்கான பிரான்ஸ் நாட்டுத் துணைத் தூதா் ஜீன்-பிலிப் ஹூதா், புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு சாா்பில் மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் ஆகியோா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.
இந்நிகழ்ச்சியின்போது இந்தியா, பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளின் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு, தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன.
இதில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.