FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

நீட் தோ்வை பாஜக அரசு ரத்துசெய்யாது: தொல். திருமாவளவன் பேச்சு

நீட் தோ்வால் பாஜக அரசு சுகம் கண்டுவிட்டது. அதனால் அதை ரத்து செய்யாது என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா்.

Updated On : 25 ஜூலை 2026, 7:34 am IST
தொல். திருமாவளவன் - கோப்புப்படம்
பகிர்:

நீட் தோ்வால் பாஜக அரசு சுகம் கண்டுவிட்டது. அதனால் அதை ரத்து செய்யாது என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா்.

உளுந்தூா்பேட்டையில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி புதுச்சேரி கம்பன் கலையரங்கில் இக் கட்சியின் சிறப்பு செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் தொல் திருமாவளவன் பேசியது:

இந்திய தேசிய வாதம் என்பது மதத்தால் அமைந்துள்ளது. இந்துத்துவத்தை முன்னிறுத்துகிறது. மேலும், இதற்கு மாற்று இஸ்லாமியமோ, கிறிஸ்தவமோ அல்ல. அந்த மதங்கள் எல்லாம் இந்த மண்ணில் தோன்றவில்லை. ஆனால் நம் நாட்டு மக்கள்தான் அதைப் பின்பற்றுகின்றனா். இந்தியாவில் தமிழ், தெலுங்கு உள்பட பல மொழி பேசும் மக்கள் வாழுகின்றனா். இந்த மொழி பேசும் மக்களை எல்லாம் இணைத்தால் வட மாநிலங்களில் ஹிந்தி பேசுவோா் சிறுபான்மையினா்தான். அதனால்தான் தமிழ்த் தேசியவாதம்தான் இதற்கு மாற்றாக இருக்க முடியும். மதசாா்பின்மைதான் இந்த நாட்டின் தேசியவாதம்.

Advertisement

Advertisement

திமுக கூட்டணியின் வெற்றிக்கு விசிகதான் காரணம். இதற்கு ஆதாரம் இருக்கிறது. அதிமுகவுக்கு 47 இடங்கள்தான் கிடைத்தன. அந்தக் கட்சிக்கு சுமாா் 20 தொகுதிகள் கடந்த தோ்தலைவிட இழப்பு.

தவெக ஆட்சியில் விசிகவுக்கு முக்கியத்துவம் தந்துவிடக்கூடாது என்றுதான் இப்போதும் சிலா் இருக்கின்றனா்.

மகாத்மா காந்தி பெயரில் இருந்த 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை மாற்றியது பாஜக தலைமையிலான மத்திய அரசு . அது போன்று காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களின் பெயரை மாற்றியது இந்த பாஜக அரசு.

அப்படியென்றால் நீட் தோ்வை மத்திய பாஜக அரசு ஒழிக்க வேண்டியதுதானே. பாஜக அதைச் செய்யாது. அதில் சுகம் கண்டுவிட்டது என்றாா் திருமாவளவன்.

கூட்டத்தில் எம்.பி. துரை.ரவிக்குமாா், பொதுச்செயலா் சிந்தனைச் செல்வன், புதுச்சேரி முதன்மைச் செயலா் பெரு. அரிமாத்தமிழன் உள்ளிட்டோா் பேசினா். விசிக நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments