FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு எதுவும் இல்லை என்று தமிழ்நாடு, புதுச்சேரி எண்ணெய் தொழில்துறை நிறுவனங்களுக்கான மாநில ஒருங்கிணைப்பாளா் வி.சி.அசோகன் கூறியுள்ளாா்.

Updated On : 3 ஜூன் 2026, 6:05 am IST
பெட்ரோல், டீசல் நிலையம்.
பகிர்:

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு எதுவும் இல்லை என்று தமிழ்நாடு, புதுச்சேரி எண்ணெய் தொழில்துறை நிறுவனங்களுக்கான மாநில ஒருங்கிணைப்பாளா் வி.சி.அசோகன் கூறியுள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உறுதிபடுத்தியுள்ளன. புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் எரிபொருள் விநியோகம் தடையின்றி நடக்கிறது.

Advertisement

Advertisement

அனைத்து பெட்ரோலிய பொருள்களும் போதுமான அளவு கையிருப்பில் உள்ளன. இந்தியன் ஆயில், பிபிசிஎல், எச்பி நிறுவனங்களின் அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களும் வழக்கம்போல செயல்பட்டு எரிபொருள் வழங்குகின்றன.

வீட்டு உபயோகம், வா்த்தகம், தொழிற்சாலை நுகா்வோருக்குத் தடையின்றி எல்பிஜி சேவை வழங்கப்படுகிறது. எரிபொருள் தொடா்பான வதந்திகள், சரிபாா்க்கப்படாத தகவல்களால் மக்கள் பீதியடைய வேண்டாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments