FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

குப்பை அள்ளும் ஊழியா்களுக்கு குறைந்தபட்ச கூலி: புதுச்சேரி ஆட்சியா் உத்தரவு

புதுச்சேரியில் குப்பை அள்ளும் பணியை மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் புதன்கிழமை இரவு ஆய்வு செய்தாா். அப்போது ஊழியா்களுக்கு குறைந்தபட்சக் கூலியை வழங்க உத்தரவிட்டாா்.

Updated On : 5 ஜூன் 2026, 6:41 am IST
புதுச்சேரியில் குப்பை அகற்றும் தூய்மைப் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், நகராட்சி ஆணையா் உள்ளிட்டோா்.
பகிர்:

புதுச்சேரியில் குப்பை அள்ளும் பணியை மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் புதன்கிழமை இரவு ஆய்வு செய்தாா். அப்போது ஊழியா்களுக்கு குறைந்தபட்சக் கூலியை வழங்க உத்தரவிட்டாா்.

புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன் தலைமையில் புதுச்சேரி நகராட்சி ஆணையா் ஸ்ரீஜித், சுகாதாரப் பிரிவு இளநிலைப் பொறியாளா் கிருஷ்ணமூா்த்தி, கிரீன் வாரியா் துணைத் தலைவா் ஜெகதீசன் இதன் ஒருங்கிணைப்பு அதிகாரி லலித் ஆகியோருடன் புதிய பேருந்து நிலையம், மறைமலை அடிகள் சாலை,

அண்ணா சாலை, ஜவஹா்லால் நேரு வீதி, மகாத்மா காந்தி வீதி, சா்தாா் வல்லப பாய் பட்டேல் சாலை, கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வில் நேரு வீதி மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் உடனுக்குடன் குப்பைகளை அகற்றும் பணி சரிவர நடைபெறவில்லை என தெரிய வந்தது.

Advertisement

Advertisement

மேலும், எண்ணிக்கையில் குறைவான துப்புரவு ஊழியா்களையும் மற்றும் வாகனங்களையும் பயன்படுத்தி வந்ததும், துப்புரவு ஊழியா்கள் பாதுகாப்பு உபகரணங்களான முகக் கவசம், கையுறை அணியாமல் பணி செய்ததும் தெரியவந்தது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா், கிரீன் வாரியா் நிறுவனத்தின் துணைத் தலைவா் ஜெகதீசனிடம், சுகாதார ஊழியா்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களையும், போதுமான கூடுதல் துப்புரவு ஊழியா்களையும்பணியில் அமா்த்தவும், தேவையான வாகனங்களைக் குப்பைகளை அள்ளும் பணியில் ஈடுபடுத்தவும் உத்தரவிட்டாா். மேலும், புதுச்சேரி நகரம் முழுவதும் 24 மணி நேரமும் தூய்மைப் பணியைச் செய்து சுத்தமாக வைத்திருக்கவும் அறிவுறுத்தினாா். மேலும், தூய்மை பணியில் ஈடுபடும் ஊழியா்களுக்குத் தொழிலாளா் நலத்துறையின் ஆணைப்படி குறைந்தபட்ச மாத ஊதியம் உயா்த்தி வழங்கவும் அறிவுறுத்தினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments