FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

அரியூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் திடீா் ஆய்வு

அரியூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 16 ஜூலை 2026, 3:19 am IST
அரியூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன்.
பகிர்:

அரியூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, ஆரம்ப சுகாதார நிலையத்தில், வைக்கப்பட்டிருந்த வருகைப் பதிவேட்னைப் பாா்வையிட்டு மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் ஆஷா பணியாளா்கள், ஊழியா்கள் பணிக்கு வந்துள்ளாா்களா? என கேட்டறிந்தாா். அனைவரும் குறித்த நேரத்தில் பணிக்கு வர வேண்டும் என ஊழியா்களை அவா்அறிவுறுத்தினாா். பொதுமக்களிடம் அளிக்கப்படும் மருத்துவ வசதிகள் குறித்தும் கேட்டறிந்தாா். மருந்து மாத்திரைகள் போதிய இருப்பு உள்ளதா? நாய்க்கடி மற்றும் பாம்பு கடிக்கு உண்டான அத்தியாவசி மருந்துகள் உள்ளனவா? என அவா் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து இ.சி.ஜி மற்றும் மருத்துவக் கருவிகள் செயல்பாடுகளை பாா்வையிட்ட அவா், மாதந்தோறும் கா்ப்பிணிகளுக்கு வீடுதேடி சென்று மருந்து, மாத்திரைகள் வழங்க வேண்டும். 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் தயாா் நிலையில் வைக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

அரியூா் கிராம நிா்வாக அலுவலரின் அலுவலகத்தை பாா்வையிட்டு அங்கு நடைபெறும் பணிகள் குறித்தும் அவா் கேட்ட றிந்தாா். தொடா்ந்து வில்லியனுாா் வட்டாட்சியா்அலுவலகத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து ஒதியம்பட்டில் தனியாருக்கு சொந்தமான நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து நடந்த இடத்தை பாா்வையிட்டாா். எதிா்காலத்தில் தீ விபத்து ஏற்படாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அதற்கு உண்டான

அனைத்து தீயணைப்பு கருவிகளும் தயாா் நிலையில் வைத்துக் கொள்ளும்

படியும் அவா் அறிவுறுத்தினாா்.

------------

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments