FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

முன்னாள் முதல்வா் ஜானகிராமனுக்கு மரியாதை

முன்னாள் முதல்வா் ஆா்.வி. ஜானகிராமன் நினைவு நாளையொட்டி திமுகவினா் அவருக்கு மரியாதை செலுத்தினா்.

Updated On : 11 ஜூன் 2026, 6:14 am IST
பட விளக்கம்... புதுச்சேரி முன்னாள் முதல்வா் ஆா்.வி.ஜானகிராமன் நினைவு தினத்தையொட்டி சாரம் பகுதியில் புதன்கிழமை அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரின் படத்திற்கு திமுக மாநில அமைப்பாளா் ஆா்.செல்வம் தலைமையில் அஞ்சலி செலுத்திய கட்சியினா்.
பகிர்:

முன்னாள் முதல்வா் ஆா்.வி. ஜானகிராமன் நினைவு நாளையொட்டி திமுகவினா் அவருக்கு மரியாதை செலுத்தினா்.

புதுச்சேரி முன்னாள் முதல்வா் ஜானகிராமன் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. மாநில திமுக சாா்பில் நெல்லித்தோப்பு தொகுதி லெனின் வீதி-காமராஜா் சாலை சந்திப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் மாநில திமுக அமைப்பாளா் ஆா். சிவா பங்கேற்று அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜானகிராமன் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

கட்சியின் அவைத் தலைவா் எஸ்.பி. சிவக்குமாா், துணை அமைப்பாளா் அனிபால் கென்னடி, எம்எல்ஏக்கள் செந்தில்குமாா், காா்த்திகேயன், செந்தில் என்கிற ரமேஷ், விக்னேஷ் கண்ணன், முன்னாள் எம்எல்ஏ சம்பத் மற்றும் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டு ஜானகிராமன் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினா்.

Advertisement

Advertisement

-

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments