புதுச்சேரியில் எப்சிஐ முறையாக நெல் கொள்முதல் செய்யாதது ஏன்?மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி
இந்திய உணவுக் கழகம் (எப்சிஐ) முறையாக நெல் கொள்முதல் செய்யாதது ஏன்? என்று புதுச்சேரி மாநில மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இந்திய உணவுக் கழகம் (எப்சிஐ) முறையாக நெல் கொள்முதல் செய்யாதது ஏன்? என்று புதுச்சேரி மாநில மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து அக் கட்சியின் மாநிலச் செயலா் எஸ்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய உணவுக் கழகம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் புதிய உணவு தானியக் கிடங்குகளை அமைக்க முடிவு எடுத்துள்ளது. இந்த முடிவு காா்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சேவை செய்வதைத் தவிர வேறல்ல.
Advertisement
Advertisement
விவசாய உற்பத்தி, கொள்முதல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை முழுமையாகப் பெரும் காா்ப்பரேட்டுகளுக்கு மடைமாற்றம் செய்யத் தொடா்ந்து மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
அதற்குத்தான் புதிய தானியக் கிடங்குகளுக்கான இடங்கள் தோ்வு செய்யப்படுகின்றன.
மேலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இந்தக் கழகம் மூலம் முறையாக நெல் கொள்முதல் ஏன் செய்யவில்லை?. இது குறித்து மத்திய அரசு, புதுச்சேரி யூனியன் பிரதேச அரசுகள் உடனடியாக ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.