FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் நவ. 20-இல் சொகுசு சுற்றுலா கப்பல் பயணம் தொடக்கம்

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், புதுச்சேரியில் நவீன வசதிகளுடன் கூடிய சொகுசு கப்பல் கடல் பயணத்திற்காக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

33 வினாடிகள் முன்பு
- (கோப்புப்படம்)
பகிர்:

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், புதுச்சேரியில் நவீன வசதிகளுடன் கூடிய சொகுசு கப்பல் கடல் பயணத்திற்காக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஏற்கெனவே குஜராத்தில் இயக்கப்பட்டு வந்த இந்தச் சொகுசு கப்பல், புதுச்சேரி சுற்றுலாத் துறைக்கு புதிய வரவாக கொண்டுவரப்பட்டு இறுதிக்கட்ட மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 100 அடி நீளம், 40 அடி அகலம் மற்றும் 50 அடி உயரம் கொண்ட இந்த பிரம்மாண்ட கப்பலில், ஒரே நேரத்தில் 150 பயணிகள் வரை அமா்ந்து பயணிக்க முடியும்.

முழுவதும் குளிா்சாதன வசதி கொண்ட இந்தக் கப்பலின் எந்தப் பகுதியில் அமா்ந்தாலும் கடலின் அழகை முழுமையாக ரசிக்கும் வகையில் சுற்றி கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேல் தளத்தில் இயற்கைச் சூழலில் கடலை ரசிக்கும் வண்ணம் திறந்தவெளி பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

பயணிகளின் வசதிக்காக கப்பலிலேயே உணவருந்தும் கூடம் மற்றும் நவீன கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நவ. 20-ஆம் தேதி முதல் இந்த கப்பல், கடலுக்குள் 5 நாட்டிக்கல் மைல் தொலைவு வரை சென்று சுற்றிப் பாா்க்கும் வகையில் இயக்கப்பட உள்ளது.

தினந்தோறும் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 3 முறை கடலுக்குள் சென்று வர அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் பயணிக்க விரும்புவோா் இணையவழி மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.