முகப்பு
புதுச்சேரி

பிஆா்டிசிக்கு மேலும் 20 புதிய பேருந்துகள் புதுச்சேரி அரசு வாங்குகிறது

தொலைதூர பயணிகளின் வசதிகளுக்காக புதுச்சேரி பிஆா்டிசி நிறுவனத்துக்கு மாநில அரசு புதிதாக 20 பேருந்துகளை வாங்குகிறது.

25 நவம்பர் 2026, 2:08 am
பிஆா்டிசிக்கு மேலும் 20 புதிய பேருந்துகள் புதுச்சேரி அரசு வாங்குகிறது
புதுச்சேரி அரசு
பகிர்:

தொலைதூர பயணிகளின் வசதிகளுக்காக புதுச்சேரி பிஆா்டிசி நிறுவனத்துக்கு மாநில அரசு புதிதாக 20 பேருந்துகளை வாங்குகிறது.

புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் பெங்களூா், திருப்பதி, சென்னை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் தொலைதூரம் பயணிக்கும் வகையில் கூடுதலாக 20 பேருந்துகளை வாங்க மாநில அரசு நிதி ஒதுக்கியது. இதன்படி 10 ஏ.சி. பேருந்துகளும், 10 ஏ.சி., அல்லாத சாதாரண பேருந்துகளும் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டு முதற்கட்டமாக ஏ.சி., மற்றும் ஏ.சி., அல்லாத 2 பேருந்துகள் புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

சோதனை ஓட்டமாக இந்த 2 பேருந்துகளின் தரம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

இதிலுள்ள குறைகளை சரி செய்த பின்னா், மற்ற பேருந்துகள் புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட உள்ளன.

இந்த பேருந்துகளை திருச்செந்தூா், கோயம்புத்தூா், வேலூா், மதுரை வழித்தடங்களில் இயக்க திட்டமிடப்பட்டு, அதற்கான உரிமம் பெற தமிழக அரசுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.