தமிழக நிதியமைச்சா் மீதான வழக்கை அக். 26 வரை விசாரிக்கத் தடை
தமிழக நிதியமைச்சா் மரியவில்சன் மீதான வழக்கை அக். 26- வரை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து புதுச்சேரி தலைமை நீதிபதி டி.வி. ஆனந்த் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.
புதுச்சேரி எழில் நகரில் வசித்து வரும் சகோதரா் மரிய குளோத்தின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சகோதரா், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீஸாா் தமிழக நிதியமைச்சா் மரியவில்சன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
இந்த வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது. இதை விசாரித்து வந்த நடுவா் சேரலாதன் மாற்றப்பட்டதால் இந்த வழக்கை இரண்டாவது குற்றவியல் நடுவா் சந்திரசேகா் விசாரித்து வருகிறாா்.
Advertisement
Advertisement
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, புதுச்சேரி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் அமைச்சா் மரியவில்சன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஆனந்த் அக். 12 வரை இவ்வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்தாா்.
இந்நிலையில், இந்த மனு மீண்டும் திங்கள்கிழமை தலைமை நீதிபதி முன் விசாரணைக்கு வந்தபோது அக் 26 வரை வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.