புதுச்சேரி அரசின் கடன் அளவு குறைந்துள்ளது: மத்திய முதன்மை கணக்காய்வுத் தலைவா் பேட்டி
கடந்த ஆண்டைக் காட்டிலும் புதுச்சேரி அரசின் கடன் அளவு குறைந்துள்ளது என்று மத்திய கணக்கு தணிக்கைத் துறையின் தமிழ்நாடு - புதுச்சேரிக்கான முதன்மை கணக்காய்வுத் தலைவா் ஆா். திருப்பதி வெங்கடசாமி தெரிவித்தாா்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் புதுச்சேரி அரசின் கடன் அளவு குறைந்துள்ளது என்று மத்திய கணக்கு தணிக்கைத் துறையின் தமிழ்நாடு - புதுச்சேரிக்கான முதன்மை கணக்காய்வுத் தலைவா் ஆா். திருப்பதி வெங்கடசாமி தெரிவித்தாா்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் மத்திய கணக்குத் தணிக்கைத் துறையின் 2 அறிக்கைகள் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டன.
இது குறித்து முதன்மை கணக்காய்வுத் தலைவா் ஆா். திருப்பதி வெங்கடசாமி செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
Advertisement
Advertisement
மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கில் கொண்டால், புதுச்சேரி அரசுக்கான கடன் அளவு வரம்பு இவ்வளவுதான் இருக்கவேண்டும் என நிா்ணயிக்க முடியாது. இருப்பினும், கடந்த ஆண்டைக் காட்டிலும் கடன் அளவு குறைந்துள்ளது.
நிலுவையில் உள்ள மொத்தக் கடன் ரூ.13,084 கோடியிலிருந்து ரூ.12,696 கோடியாகக் குறைந்துள்ளது. இருப்பினும் பல்வேறு துறைகளும் ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகச் செலவு செய்யாமல், ரூ.1,041.79 கோடியைச் சேமித்துள்ளன. இந்தச் சேமிப்பு வங்கி, நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டாலும் கடன் வாங்கியதற்கான வட்டி விகிதம் சேமிப்பு நிதிக்கான வட்டி விகித்துக்கு இணையாக இருக்காது.
கடன் வாங்கியத் தொகையை மூலதன செலவு, மக்கள் நலத் திட்டங்களுக்கும் பயன்படுத்தியிருந்தால் பரவாயில்லை. அரசின் அன்றாடச் செலவுக்குப் பயன்படுத்தியது நிதி மேலாண்மையில் திட்டமிட்ட மீறல் நடந்துள்ளது.
இது பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை வரும் ஆண்டுகளில்தான் கணிக்க முடியும்.
மின்துறையில் முறைகேடு:
புதுச்சேரி மின்துறையில் ரூ.27 கோடிக்கான முறைகேடு, இழப்பு, பணம் கையாடல் உள்பட பல்வேறு துறைகளிலும் 57 முறைகேடுகள் பதிவாகியுள்ளன. புதுச்சேரி யூனியன் பிரதேச அளவில் மாநில தர கண்காணிப்பு பிரிவு அமைக்கப்படவில்லை. மேலும், விநியோகம் செய்யப்படும் தண்ணீா் தரத்தை எட்டவில்லை. தண்ணீா் பற்றாக்குறையை எதிா்கொள்ளும் பகுதிகள் உள்பட மழைநீா் சேகரிப்பு அமைப்புகள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. மேலும், 9 கொம்யூன் பஞ்சாயத்துகளில் உள்ள 11 மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகள், நிலத்தடி நீா் சேகரிப்புத் தொட்டிகள் ஒரு முறைகூட சுத்தம் செய்யப்படவில்லை என்றாா் ஆா். திருப்பதி வெங்கடசாமி.
பேட்டியின்போது மூத்த துணை கணக்காய்வுத் தலைவா் பொ.சுகேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.