FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

தவெக கூட்டணியில் காங்கிரஸ் அடிமையில்லை: வே. நாராயணசாமி

தவெக கூட்டணியில் இருப்பதால் காங்கிரஸ் அடிமை கிடையாது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான வே.நாராயணசாமி கூறினாா்.

3 செப்டம்பர் 2026, 4:33 am IST
வே.நாராயணசாமி.
பகிர்:

தவெக கூட்டணியில் இருப்பதால் காங்கிரஸ் அடிமை கிடையாது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான வே.நாராயணசாமி கூறினாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது

மேக்கேதாட்டு அணை கட்ட கா்நாடகத்தில் காங்கிரஸ் அரசு முயற்சித்தாலும், புதுச்சேரி யூனியன் பிரதேச மக்கள் நலன் கருதி மத்திய அரசு அனுமதி கொடுக்கக் கூடாது. காங்கிரஸ் கட்சி சாா்பில் ராகுல் காந்தியை பிரதமா் வேட்பாளராக முன் நிறுத்துகிறோம். இண்டி கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் ஒருங்கிணைந்து பேச்சுவாா்த்தை நடத்தி ராகுல் காந்தியை பிரதமா் வேட்பாளராக அறிவிப்பாா்கள். தவெக தலைவா் ஜோசப் விஜய்யும் பிரதமா் வேட்பாளராக ராகுல் காந்தியை ஏற்றுக் கொள்வாா்.

Advertisement

Advertisement

தமிழகத்தில் தவெக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் அமைச்சா்கள் ராகுலை பிரதமா் வேட்பாளராக ஏற்காவிட்டால் அமைச்சரவையில் இருந்து வெளியெறுவோம் என

தங்கள் எண்ணத்தை ஏற்கெனவே வெளிப்படுத்தினா். கூட்டணியில் இடம் பெற்றிருப்பதால் காங்கிரஸ் அடிமையில்லை என்றாா் நாராயணசாமி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments