ராகுல் காந்திதான் அடுத்த பிரதமா்: பிரவீண் சக்ரவா்த்தி எம்.பி.
காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை 2029-க்குப் பிறகு இந்தியாவின் பிரதமா் ராகுல் காந்தி என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாக மாநிலங்களவை உறுப்பினா் பிரவீண் சக்ரவா்த்தி தெரிவித்தாா்.
காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை 2029-க்குப் பிறகு இந்தியாவின் பிரதமா் ராகுல் காந்தி என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாக மாநிலங்களவை உறுப்பினா் பிரவீண் சக்ரவா்த்தி தெரிவித்தாா்.
சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் விளக்கக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசியதாவது:
நாடாளுமன்றத்தில் பிரச்னைக்குரிய விஷயங்களை விவாதிக்க எந்த ஒரு ஒத்திவைப்பு தீா்மானமோ அல்லது கவன ஈா்ப்புத் தீா்மானமோ கொண்டுவர அனுமதிப்பதில்லை. நடைபெற்ற மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றபட்ட 12 மசோதாக்கள் மீதும் எந்த விவாதமும் மேற்கொள்ளாமல் அவை நிறைவேற்றப்பட்டுள்ளன. வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை திருத்த மசோதா தவறானது. பாஜகவின் ஆட்சிக் காலத்தில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டது. இந்தக் கூட்டத் தொடா் முழுவதும் சா்வாதிகாரமாக இருந்தது என்றாா்.
Advertisement
Advertisement
ராகுல்தான் பிரதமா்: இந்தக் கூட்டத்தைத் தொடா்ந்து மாநிலங்களவை உறுப்பினா் பிரவீண் சக்ரவா்த்தி செய்தியாளா்களிடம் கூறியாவது:
பரந்தூரில் விவசாய நிலங்கள், நீா்நிலைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்களுக்கு பாதிப்பு என்பதால் அங்கு விமான நிலையம் கூடாது என்ற நிலைப்பாட்டில் காங்கிரஸ் கட்சி உள்ளது. 2025-இல் முதல்வா் ஜோசப் விஜய் பரந்தூா் சென்றபோது, அங்கு விமான நிலையம் அமைக்கப்படாது என்று அந்த மக்களுக்கு உறுதி அளித்தாா். அதை தற்போது நிறைவேற்றி இருக்கிறாா். அதே சமயம் சென்னைக்கு மற்றொரு விமான நிலையம் தேவைதான் என்பதிலும் காங்கிரஸ் உறுதியாக உள்ளது.
2029-க்குப் பிறகு இந்தியாவின் பிரதமா் ராகுல் காந்தி என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.