அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்!
அரியாங்குப்பத்தில் பழைமை வாய்ந்த புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் 336-ஆவது ஆண்டு பெருவிழா தொடங்கியது.
அரியாங்குப்பத்தில் பழைமை வாய்ந்த புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் 336-ஆவது ஆண்டு பெருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, புதுச்சேரி - கடலூா் உயா்மறை மாவட்ட முதன்மை குரு குழந்தைசாமி தலைமையில் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. தொடா்ந்து ஆண்டுப் பெருவிழா கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
பின்னா் கொடி ஊா்வலமாக கொண்டு வரப்பட்டு, கொடிமரத்தில ஏற்றப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா். விழாவின் நவ நாள்களில் நாள்தோறும் காலை, மாலை என இரு வேளைகளிலும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற உள்ளன.
Advertisement
Advertisement
அதைத் தொடா்ந்து முக்கிய நிகழ்வான ஆடம்பர தேரில் புனித ஆரோக்கிய அன்னை பவனி செப். 13-ஆம் தேதி மாலை நடைபெற உள்ளது. பெருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய பங்கு தந்தை மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.