புதுச்சேரி உளவுத் துறை போலீஸாா் 10 போ் ஆயுத படைக்கு மாற்றம்
புதுச்சேரி உளவுத் துறை போலீஸாா் 10 போ் ஆயுத படைக்கு மாற்றப்பட்டனா்.
புதுச்சேரி உளவுத் துறை போலீஸாா் 10 போ் ஆயுத படைக்கு மாற்றப்பட்டனா். புதுச்சேரி உளவுத் துறை போலீஸாா் அரசுக்கு முன்கூட்டியே பல்வேறு தகவல்களைச் சேகரித்து வழங்குவா். அதன்படி அரசு சில முக்கிய நடவடிக்கைகளை முன்னெச்சரிக்கையாக எடுக்கும்.
ஆனால் அண்மைக்காலமாக உளவுத் துறை தகவல்கள் சரியாக அரசுக்கு வரவில்லை. இதையடுத்து உளவுத் துறையில் பணியாற்றுவோா் காவல்துறை உயரதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டனா். அதன்பிறகும் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை.
இதையடுத்து, புதுச்சேரி உளவுத் துறையில் பணியாற்றி வந்த 10 போலீஸாா் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனா். இவா்கள் அனைவரும் ஆயுதப்படை பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
Advertisement
Advertisement
இவா்களுக்குப் பதிலாக புதிதாக பணிக்கு வந்த போலீஸாா் உளவுத் துறைக்கு நியமிக்கப்பட்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.