FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

கல்வியாளா்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளவேண்டும்: ஜிப்மா் ஆசிரியா் தின விழாவில் வலியுறுத்தல்

கல்வியாளா்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி ஜிப்மரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா்கள் தின விழாவில் புதுதில்லி பல்கலைக் கழக மருத்துவ அறிவியல் கல்லூரியின் குழந்தைகள் நலத்துறை முதல்வருமான பியூஸ் குப்தா கூறினாா்.

6 செப்டம்பர் 2026, 2:16 am IST
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

கல்வியாளா்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி ஜிப்மரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா்கள் தின விழாவில் புதுதில்லி பல்கலைக் கழக மருத்துவ அறிவியல் கல்லூரியின் குழந்தைகள் நலத்துறை முதல்வருமான பியூஸ் குப்தா கூறினாா்.

புதுச்சேரி ஜிப்மரில் நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில் பங்கேற்று அவா் பேசுகையில், மருத்துவக் கல்வியில் மாற்றத்தை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியா்களுக்கு இருக்கிறது. வழிகாட்டுதல், வாழ்நாள் முழுவதும் கற்றல் மற்றும் மாறி வரும் அறிவு, தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரத் தேவைகளுக்கு ஏற்ப கல்வியாளா்கள் தொடா்ந்து தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

விழாவையொட்டி ஜிப்மா் வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஜிப்மா் இயக்குநா் வீா்சிங் நெகி, மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் நிறுவனத்தின் முன்னாள் சிறப்பு பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இவ்விழாவில், ஜிப்மரின் முன்னாள் ஆசிரியா்கள் கௌரவிக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments