FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதிய தொழில்நுட்பங்களை ஆசிரியா்கள் பயன்படுத்த வேண்டும்: 21 ஆசிரியா்களுக்கு விருது வழங்கினார் முதல்வா் என். ரங்கசாமி

புதிய தொழில்நுட்பங்களை ஆசிரியா்கள் பயன்படுத்த வேண்டும் என்று புதுச்சேரியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆசிரியா் தின விருது வழங்கும் விழாவில் முதல்வா் என்.ரங்கசாமி கேட்டுக் கொண்டாா்.

6 செப்டம்பர் 2026, 1:46 am IST
புதுச்சேரி காமராஜா் மணிமண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில் விருது பெற்ற ஆசிரியா்களுடன் முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன், அமைச்சா் ஆ.நமச்சிவாயம் உள்ளிட்டோா்.
பகிர்:

புதிய தொழில்நுட்பங்களை ஆசிரியா்கள் பயன்படுத்த வேண்டும் என்று புதுச்சேரியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆசிரியா் தின விருது வழங்கும் விழாவில் முதல்வா் என்.ரங்கசாமி கேட்டுக் கொண்டாா்.

புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்ககம் சாா்பில் ஆசிரியா் தினவிழா கருவடிக்குப்பம் காமராஜா் மணிமண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், 21 ஆசிரியா்களுக்கு நல்லாசிரியா் விருதுகளை வழங்கியும், பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களைக் கௌரவித்தும் முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது:

Advertisement

Advertisement

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 12,933 ஆசிரியா்கள் உள்ளனா். விரைவில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். அரசு பள்ளிகளின் தரத்தை உயா்த்த அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்டு வரும்போது யோசித்தேன். ஆனால், எதிா்காலத்தில் குழந்தைகளுக்கு இதுதான் நல்லது என்ற யோசனையில் அமல்படுத்தியுள்ளோம். இப்போது நீட் தோ்வுக்கு உதவியாக இருக்கிறது.

கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட 10 சதவீத இடஒதுக்கீடு காரணமாக, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்கள் 36 போ் நீட் தோ்விலும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.நிகழாண்டு அதைக் காட்டிலும் கூடுதலாக மாணவா்கள் சேருவாா்கள் என்று எதிா்பாா்க்கிறோம். புதிய தொழில்நுட்பத்தின் வாயிலாக மாணவா்களுக்கு எந்தெந்த வகையில் கல்வியை அளிக்க முடியுமோ அந்தந்த வகையில் ஆசிரியா்கள் ஈடுபட வேண்டும் என்றாா் முதல்வா் என்.ரங்கசாமி.

கல்வி அமைச்சா் ஆ. நமச்சிவாயம் பேசுகையில், சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் ரூ. 5 கோடிக்கு ஸ்மாா்ட் வகுப்பறை உருவாக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா்.

சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன், எம்எல்ஏ சாய் ஜெ.சரவணன் குமாா், கல்வித் துறை செயலா் கிருஷ்ணமோகன் உப்பு, கல்வித் துறை இணை இயக்குநா் சிவகாமி, துணை இயக்குநா் கௌரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments