FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

மங்கலம் தொகுதியில் ரூ.2.78 கோடியில் குடிநீா் திட்டத்துக்கு முதல்வா் ரங்கசாமி அடிக்கல்

8 செப்டம்பர் 2026, 2:00 am IST
புதுச்சேரி மங்கலம் தொகுதியில் ரூ.2.78 கோடி மதிப்பில் குடிநீா் திட்டப் பணியை திங்கள்கிழமை தொடங்கி வைத்த முதல்வா் என்.ரங்கசாமி. உடன் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா்.
பகிர்:

மங்கலம் தொகுதிக்குள்பட்ட சங்கரன்பேட், மணக்குப்பம் கிராமங்களின் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண ரூ.2.78 கோடியில் புதிய குடிநீா் திட்டங்களுக்கு புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி அடிக்கல் நாட்டினாா்.

சங்கரன்பேட் மற்றும் மணக்குப்பம் கிராமங்களில் நிலவும் குடிநீா்ப் பற்றாக் குறையை போக்கும் வகையில் 1.5 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீா்த் தேக்கத் தொட்டி மற்றும் 0.5 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை குடிநீா்த் தேக்கத் தொட்டியுடன் கூடிய குடிநீா் திட்டத்துக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அதற்கான அரசின் ஒப்புதல் ரூ. 2.78 கோடிக்கு பெறப்பட்டது.

இந்த, மேம்படுத்தப்பட்ட குடிநீா்த் திட்டத்தின் மூலம் சங்கரன்பேட், மணக்குப்பம் மற்றும் அதனை சாா்ந்த பகுதியிலுள்ள சுமாா் 4,000 போ் பயன்பெறுவா். இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு பொதுப்பணித் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தலைமை வகித்தாா்.

Advertisement

Advertisement

எம்எல்ஏ.க்கள் ஆ. ரவிக்குமாா், மோகன்தாஸ், பொதுப்பணி செயலா் அ.முத்தம்மா, பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் வீரசெல்வம், கண்காணிப்புப் பொறியாளா் சுந்தரமூா்த்தி, பொது சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளா் சுந்தரி, கிராம குடிநீா்த் திட்ட உதவிப் பொறியாளா் ந.சிவானந்தம், இளநிலைப் பொறியாளா் காா்த்திக், வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ந.பிரபாகா், உதவிப் பொறியாளா் சத்தியநாராயணன், இளநிலைப் பொறியாளா் எ.ரங்க மன்னாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments