FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்! பிரசாரத்தைத் தொடங்கிய திமுக!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் பற்றி...

10 செப்டம்பர் 2026, 12:45 pm IST
தட்டாஞ்சாவடி தொகுதி - video crop
பகிர்:

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் முதல் கட்சியாக வேட்புமனு தாக்கல் செய்த திமுக, கோயிலில் சுவாமி தரிசனம் செய்து இன்று பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது.

தட்டாஞ்சாவடி தொகுதி மக்கள் மாற்றத்தை விரும்புவதாகும், அந்த மாற்றம் இந்த இடைத்தேர்தலில் நடைபெறும் என்றும், எங்கள் திமுக வேட்பாளர் அமுக வெற்றி பெறுவார் என திமுக எம்பி ஜெகத்ரட்சகன் பிரசாரத்தைத் தொடங்கி வைத்து பேட்டி அளித்தார்.

புதுச்சேரியில் கடந்த ஏப்ரலில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தட்டாஞ்சாவடி, மங்கலம் ஆகிய 2 தொகுதிகளில் முதல்வர் ரங்கசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலுக்குப் பின் தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ பதவியை முதல்வர் ரங்கசாமி ராஜிநாமா செய்தார். இதனால் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அட்டவணையை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 6ம் தேதி நடக்கிறது. தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.

Advertisement

Advertisement

இடைத்தேர்தலில் ஆளும் என்ஆர். காங்கிரஸ், பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்த் போட்டியிடுகிறார். திமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை முடிவு செய்வது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் புதுவை மாநில திமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இதில் தட்டாஞ்சாவடி தொகுதி திமுக வேட்பாளராக சேது செல்வம் அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தை திமுக தொடங்கியது‌. புதுச்சேரி லாஸ்பேட்டை மாரியம்மன் கோயிலில் சிறப்புப் பூஜை செய்து தொடங்கப்பட்டது. இதில் திமுக மாநில அமைப்பாளர் சிவா, ஜெகத்ரட்சகன் எம்பி, திமுக எம்எல்ஏக்கள், திமுக வேட்பாளர் சேது செல்வம் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்பு தட்டாஞ்சாவடி தொகுதிக்குள்பட்ட புதுப்பேட்டை பகுதியில் திமுக வேட்பாளர் சேது செல்வம் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். இதில் தொகுதி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெகத்ரட்சகன் எம்பி,

புதுச்சேரியில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். நிச்சயமாக தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் அந்த மாற்றம் இருக்கும். இங்கு திமுக பலமுறை வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் வியூகம் வகுத்து உள்ளோம். சில கட்சிகள் தினமும் ஒரு கூட்டணிக்குச் சென்றாலும் திமுகவுக்கு என்று வலுவான வாக்குகள் இருக்கிறது. அதை முன்னிறுத்தித் தேர்தலைச் சந்திக்க உள்ளோம். தேர்தல் வாக்குறுதிகள் என்ன என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். எங்கள் வேட்பாளர் சேது செல்வம் அமோக வெற்றி பெறுவார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments